மதுபாட்டிலில் மிதந்த தவளை! அதிர்ச்சியில் மதுபிரியர்!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
மதுபாட்டிலில் மிதந்த தவளையை பார்த்து அதிர்ச்சியடைந்த மதுபிரியர்.
ஊரடங்கு உத்தரவால் தமிழகத்தில், 45 நாட்களுக்கும் மேலாக மூடப்பட்ட நிலையில் இருந்த மதுபான கடைகள், மே-7ம் தேதி திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியது. இதனையடுத்து, மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி ஈசானிய தெருவில் உள்ள அரசு மதுபான கடையில், தென்பாதியை சேர்ந்த ஒருவர் மது வாங்க சென்றுள்ளார்.
இதனையடுத்து, அவர் வயல்பகுதிக்கு சென்று பாட்டிலை திறந்து, பாதியை கப்பில் ஊற்றி, மீதியை மூடி வைக்கும் போது, அந்த பாட்டிலில் ஏதோ மிதந்தது போல் தெரிந்துள்ளது. பின் அதனை உற்றுப்பார்த்த போது, பாட்டிலுக்குள் தவளை மிதந்துள்ளது.
இதனையடுத்து, அவர் அருகில் இருந்த ஒருவரிடம் கூறியுள்ளார். அவரின் உதவியுடன் அவர் மதுபாட்டில் வாங்கிய கடையில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில், இந்த தகவல் வெளியே தெரியாமல் மறைக்க, அக்கடை ஊழியர் தவளையுடன் இருந்த மது பாட்டிலை பெற்றுக் கொண்டு, புது மதுபாட்டில்களை கொடுத்துள்ளார்.
இதனையடுத்து, நாகை மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அம்பிகாபதியிடம், தவளை கிடந்தது குறித்து கேட்ட போது, ‘இதுவரை தங்கள் கவனத்திற்கு தகவல் வரவில்லை. ஒயின் மற்றும் பீர் வகைகளை விற்பனை செய்யும் போது, பரிசோதித்தே விற்பனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், ரம் போன்ற மதுவகைகள் நிறுவனங்களில் இருந்து வரும்போது, ஏதேனும் தவறு நடைபெற்றிருக்கலாம். எனவே இனிவரும் காலங்களில் மதுபாட்டில்களையும் நன்கு பரிசோதித்தே வழங்க ஊழியர்களை அறிவுறுத்துவோம்.’ என தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பெயிண்டராக இருந்து நடிகராக உயர்ந்ததை நினைவுக்கூர்ந்து நடிகர் சூரி பதிவு!
February 11, 2025![actor Soori](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/actor-Soori-.webp)
க்ரிப்டோ கரன்சி விளம்பரம் செய்த த்ரிஷா? அதிர்ச்சியின் அடுத்த நொடியே இன்ஸ்டாவில் அந்த பதிவு.!
February 11, 2025![Trisha x hacked](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Trisha-x-hacked.webp)
தவெகவில் எத்தனை அணிகள்? குழந்தைகள் அணி உள்பட முழு பட்டியல் வெளியீடு!
February 11, 2025![tvk vijay](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/tvk-vijay-1.webp)