முகநூலில் ஏற்பட்ட நட்பு..! 20 லட்சம் கேட்டு இளைஞர் கடத்தல்..!
மதுரை அருகே உள்ள திருப்பரங்குன்றம் வில்லாபுரத்தைச் சார்ந்தவர் ராஜூ இவர் முன்னாள் ராணுவ வீரர்.இவரது மகன் பார்த்திபன் எம்பிஏ பட்டதாரி. பார்த்திபன் கடந்த சனிக்கிழமை தனது இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றுள்ளார்.
இதை தொடர்ந்து நள்ளிரவு 12 மணியளவில் பார்த்திபன் தந்தை ராஜூவிற்கு செல்போனில் ஒரு அழைப்பு வந்தது. அந்த அழைப்பில் உங்கள் மகன் பார்த்திபனை நாங்கள் கடத்தி விட்டோம் என கூறியுள்ளனர். மேலும் 20 லட்ச ரூபாய் பணம் வேண்டும் . பணம் கொடுக்கவில்லை என்றால் உங்கள் மகனை கொன்று விடுவேன் என மிரட்டல் விடுத்து உள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜூ பணம் கொடுப்பதாக கூறியுள்ளார். மேலும் போலீசாரிடம் இது குறித்து புகார் செய்துள்ளார். இதைத் தொடர்ந்து தீவிர விசாரணையில் இறங்கிய அவனியாபுரம் போலீசார் ராஜுவை அந்த மர்ம நபர்களிடம் தொடர்ந்து பேச வைத்துள்ளனர். மேலும் 20 லட்சம் ரூபாய் பணத்தை பார்த்திபன் தாய் ஆதிலட்சுமி இடம் கொடுத்து அனுப்பி போலீசார் அவரை பின் தொடர்ந்து சென்று உள்ளனர்.
அப்போது திருப்பரங்குன்றம் வெள்ளக்கல் சாலையில் ஆதிலட்சுமியிடம் பணத்தை முருகன், சரவணன் இரு நபர்களும் பெற்றனர்.அப்போது போலீசார் இருவரையும் கைது செய்தனர். பின்னர் முருகன், சரவணன் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பார்த்திபன் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பகுதியில் கடத்தி வைத்திருந்தது தெரியவந்தது.
பின்னர் முருகன், சரவணனிடம் தங்கள் நண்பர்களிடம் பணம் வந்து விட்டது.எனவே பார்த்திபனை விட்டு விடும்படி போலீசார் பேச வைத்தன. இதைத்தொடர்ந்து பார்த்திபனை விடுவித்தனர். நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு பார்த்திபன் வீடு வந்து சேர்ந்தார்.
இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட 10 பேர் கொண்ட கும்பலில் ஏழு பேர் 20 மணி நேரத்தில் போலீசார் கைது செய்து செய்துள்ளனர். மேலும் 3 பேரை போலீஸார் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து கார் மற்றும் இரு சக்கர வாகனங்கள் போலீசார் கைப்பற்றினர்.
இந்த இதுகுறித்து பார்த்திபன் கூறுகையில், முகநூல் மூலமாக அறிமுகமான மர்ம நபர்கள் நேரில் சந்திக்கலாம் என கூறியுள்ளனர். அவர்களை நம்பி நான் சென்றபோது அவர்கள் தனதுகண்களையும் ,கால் , கையையும் கட்டிப் போட்டு காரில் கடத்திச் சென்றதாகவும் தெரிவித்தார். மேலும் சமூக வலைதளங்களில் தன்னை போல முன்பின் தெரியாதவர்களை நம்பி தனியாக செல்லவேண்டாம் என பார்த்திபன் கூறியுள்ளார்.