பள்ளி பருவத்தில் மலர்ந்த நட்பு! தனது தோழிக்காக திருநம்பியாக மாறிய பெண்!
மதுரை மாவட்டம் ஆனையூரை சேர்ந்தவர்கள் சுகன்யா மற்றும் எப்ஸியா. இவர்கள் இருவரும் பள்ளி பருவ தோழிகள். மதுரையில் உள்ள பெண்கள் மேல்நிலை பள்ளியில் 2007-ம் ஆண்டு 10-ம் வகுப்பு வரை ஒன்றாக பயின்ற இவர்கள், பள்ளியில் இருவரும் ஒன்றாக சுற்றுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்நிலையில், பெண்ணாக இருந்த எப்ஸியா, காலப்போக்கில் அவரது உடலில் ஏற்பட்ட பாலின மாறுபாட்டால், ஆணாக மாற துவங்கியுள்ளார். இதனை அறிந்த சுகன்யாவின் பெற்றோர் சுகன்யாவை கண்டித்துள்ளனர். இதனையடுத்து, 2012-ம் ஆண்டு சுகன்யாவின் பெற்றோர், சுகன்யாவுக்கு, ராஜேஷ் என்பவரை திருமணம் செய்து வைத்துள்ளனர். திருமணமாகி 7 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், சுகன்யாவுக்கும், ராஜேசுக்கும் 6 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பதாக சுகன்யாவின், கணவர் ராஜேஷ் ஒரு விபத்தில் சிக்கியுள்ளார். இதனையடுத்து, அவரால் வெளியில், எழுந்துநடமாட முடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பதாக ஒரு சுப நிகழ்ச்சிக்கு சென்ற சுகன்யா, அவரது தோழியான எப்சியாவை பார்த்துள்ளார். நீண்ட நாட்களுக்கு பின் சந்தித்த இவர்கள் இருவரும் மனம் விட்டு பேசி, தங்களது அலைபேசி என்னை பரிமாறி கொண்டுள்ளனர்.
அதன்பின், இருவரும் அலைபேசியில் பேசியுள்ளனர். அவ்வாறு பேசுகையில், அவரது கணவருக்கு நடந்த விபத்து குறித்தும், இதனால் அவரது வாழ்க்கையே சோதனையாக இருப்பதாகவும் கூறி அழுதுள்ளார்.
சுகன்யாவின் மனக்குமுறலை, தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட எப்சியா, ‘கவலைப்படாதே நீ என்னோடு வந்துவிடு, நாம் இருவரும் சேர்ந்து புதிய வாழ்க்கையை தொடரலாம் என ஆறுதல் கூறியுள்ளார். எப்சியாவின் ஆறுதல் பேச்சுக்கு மயங்கிய சுகன்யா, தன்னை உடனடியாக வந்து அழைத்து செல்லுமாறு அடம் பிடித்துள்ளார். இதனையடுத்து, சுகன்யா தனது கணவரையும், 6 வயது குழ்நதையையும் தவிக்க விட்டுவிட்டு எப்சியாவுடன் சென்றுள்ளார்.
இதனையடுத்து, எப்ஸியா தனது பெயரை ஜெய்சன் ஜோஷுவா என மாற்றிக் கொண்டார். மேலும், அறுவை சிகிச்சை மூலம் தன்னை ஒரு திருநம்பியாக மாற்றியதாக கூறியுள்ளார். இதனையடுத்து, இவர்கள் இருவரும் மதுரையில் ஒரு மாலில் வேலை செய்து கொண்டு, வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், சுகன்யாவின் பெற்றோர் தனது மகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, அவரை மீட்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, சுகன்யா இரண்டு வாரங்களுக்கு முன்பதாக, ராமநாதபுரம் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில், தனது 6 வயது மகளை மீட்டு தருமாறு புகார் அளித்துள்ளார்.
இந்த புகார் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட கேணிக்கரை காவல்நிலையம், சுகன்யாவின் பெற்றோரிடம் விசாரணை நடத்தியுள்ளது. இந்த விசாரணையில் எந்த உடன்பாடும் எட்டப்படாத நிலையில், இது போன்ற முறையற்ற வாழ்ககை வாழும் பெண்ணிடம் குழந்தையை ஒப்படைக்க மாட்டோம் என மறுத்துவிட்டனர்.
இதனையடுத்து, போலீசார் நீதிமன்றம் மூலம் இப்பிரச்சனைக்கு தீர்வு காணுமாறு அறிவுறுத்தி அனுப்பி வைத்துள்ளனர்.