பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பை தடை செய்வது தொடர்பாக பதில் அளிக்க மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் சிறையில் உயிரிழந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.பிரண்ட்ஸ் ஆஃப் போலீசை அமைப்பை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து வந்தது.இதனிடையே தூத்துக்குடியை சேர்ந்த அதிசய குமார் என்பர் மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்தார்.அதில் , பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் பல்வேறு அத்துமீறல்களில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.
எனவே தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தான்குளம் பிரண்ட்ஸ் ஆஃப் போலீசை சேர்ந்தவரிடம் சிபிசிஐடி விசாரணை மேற்கொண்டது.இந்நிலையில் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் காவல் துறையால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பா? என்று வமனித உரிமை ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது.மேலும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பை தடை செய்வது தொடர்பாக தமிழக டிஜிபி மற்றும் உள்துறை செயலாளர் 4 வாரத்தில் பதில் அளிக்க மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…