நண்பர் ரஜினிகாந்த் விரைந்து நலம் பெற்று இல்லம் திரும்ப விழைகிறேன் – முதல்வர்

அருமை நண்பர் ரஜினிகாந்த் விரைந்து நலம் பெற்று இல்லம் திரும்ப விழைகிறேன் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் ட்வீட்.
நடிகர் ரஜினிகாந்த் நேற்று மாலை திடீரென சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆண்டுக்கு ஒருமுறை செய்யப்படும் வழக்கமான பரிசோதனைக்காகவே ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அவரது மனைவி லதா ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார்.
இதனைத்தொடர்ந்து, ரஜினிக்கு ஏற்பட்டுள்ள ரத்த நாள பாதிப்பை சரிசெய்யும் சிகிச்சையில் டாக்டர்கள் ஈடுபட்டு இருப்பதாகவும், நரம்பியல் மற்றும் இருதய துறை டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல் கூறப்பட்டது.
ஏற்கனவே ரஜினிகாந்த் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்திருப்பதால், பிற உறுப்புகளின் செயல்பாடுகளையும் மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.
இதன்பின், சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த் உடல் நலம் தேறி வருவதாகவும், ஒரு சில நாட்களில் வீடு திரும்புவார் என்று மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் ரஜினிகாந்த் விரைந்து குணமடைய வேண்டும் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அருமை நண்பர் ரஜினிகாந்த் அவர்கள் விரைந்து நலம் பெற்று இல்லம் திரும்ப விழைகிறேன் என தேய்வித்துள்ளார்.
உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அருமை நண்பர் @rajinikanth அவர்கள் விரைந்து நலம் பெற்று இல்லம் திரும்ப விழைகிறேன்.
— M.K.Stalin (@mkstalin) October 29, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs RCB : அதிரடி காட்டி படிதர் அடித்த அரைசதம்.., சிஎஸ்கே அணிக்கு இதுதான் டார்கெட்.!
March 28, 2025
மீண்டும் மின்னல் வேக ஸ்டம்பிங் செய்த தோனி.! மிரண்டு போன ஆர்சிபி வீரர்கள்! நடையை கட்டிய சால்ட்..
March 28, 2025