தமிழகம்:மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் விரைவில் குணம் பெற்று பணிகளை தொடரவேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் விருப்பம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனுக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டது.இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது: ‘‘அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதியானது. மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்’’ என தெரிவித்தார்.
இதனையடுத்து,தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள்,தனது டுவிட்டர் பக்கத்தில் “அன்பு நண்பர் கலைஞானி கமல்ஹாசன் அவர்கள் கொரோனா தொற்றிலிருந்து விரைந்து மீண்டு, தனது பணிகளைத் தொடர விழைகிறேன்” எனத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து,கொரோனா தொற்று காரணமாக இராமசந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கமல்ஹாசன் அவர்கள் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் அறிக்கை வெளியிட்டது.
இந்நிலையில்,நண்பர் கமல்ஹாசன்,முழுமையான நலம் பெற வேண்டும் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் விருப்பம் தெரிவித்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:
“கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவம் பெற்று வரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நண்பர் கமல்ஹாசன் அவர்கள் விரைவில் முழுமையான நலம் பெற்று தமது வழக்கமான பணிகளை தொடர வேண்டும் என்று விழைகிறேன்’,என்று பதிவிட்டுள்ளார்.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…