ஆட்டோவில் வலம் வந்த பிரான்ஸ் நாட்டு தம்பதியினர்! அச்சத்தில் கிராம மக்கள்!
முதலில் சீனாவில் தொடங்கி, அதனை தொடர்ந்து மற்ற நாடுகளிலும் பரவி வரும் கொரோனா வைரஸ் நோயானது உலக மக்கள் மத்தியில் பயத்தையும், நடுக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தற்போது, பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில், ஆட்டோவில் வலம் வந்த பிரான்ஸ் நாட்டு தம்பதியினரை கண்டு, அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். அவர்கள் வந்த ஆட்டோ பழுதாயாகி நின்றதை கண்ட அப்பகுதி மக்கள், காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
இதனையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அவர்களை விசாரித்த போது, கொடைக்கானலில் இருந்து ஆட்டோ ஒன்றை சொந்தமாக வாங்கி அவர்கள் சென்னைக்கு செல்லவிருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து, அவர்களை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்த போது, அவர்களை ஏற்கனவே 6 முறை பரிசோதனை செய்ததாக கூறியுள்ளனர். இதனையடுத்து போலீசார் இவர்கள் திருப்பி அனுப்பி வைத்துள்ளனர்.