நாடாளுமன்றத்தில் கருத்துரிமையின் கழுத்து நெரிக்கப்பட்டது- முதல்வர்..!

mk stalin

தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் திமுக மாநிலங்களவை எம்.பி அப்துல்லா மாநிலங்களவையில் ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு திருத்த மசோதா மீதான விவாதத்தில் பெரியாரின் கருத்தை மேற்கோள் காட்டி பேசினார். இதைத்தொடர்ந்து, பெரியார் பெயரை குறிப்பிட்டு பேசிய பேச்சு அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது.

இந்நிலையில், தனது எக்ஸ் வலைதளத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்ட பதிவில், மாநிலங்களவையில் எம்.பி
எம்.பி அப்துல்லா உரையாற்றும்போது சுட்டிக்காட்டிய தந்தை பெரியாரின் மேற்கோளுக்கு பா.ஜ.க.வினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்; பெரியாரின் பெயரும் அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்திலேயே கருத்துரிமையின் கழுத்து நெரிக்கப்பட்டுள்ளது!

மண்டல் ஆணையப் பரிந்துரையை அமல்படுத்தியபோது தந்தை பெரியார்தான் இதற்குக் காரணம் என்று பிரதமர் வி.பி.சிங் பேசிய நாடாளுமன்றத்தில் தந்தை பெரியார் பெயர் நீக்கப்பட்டுள்ளது அவமானம்! மக்களின் மனங்களில் நிலைத்து நின்று, வகுப்புவாதிகளை இன்றளவும் அச்சுறுத்தும் தந்தை பெரியாரின் பெயரை எங்கும் – எப்போதும் – எந்தச் சூழலிலும் பயன்படுத்துவோம்! அனைவரும் பயன்படுத்துங்கள்! என தெரிவித்துள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்