சுதந்திர போராட்ட வீரர் கக்கனின் வாழ்கை வரலாற்று படம் – முன்னோட்டத்தை வெளியிட்டார் முதலமைச்சர்!
காங்கிரஸ் மூத்த தலைவர் மறைந்த கக்கன் பற்றிய திரைப்படத்தின் ஒலிநாடாவை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் நடந்த விழாவில், மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவரும், சுதந்திர போராட்ட வீரருமான கக்கனின் வாழ்கை வரலாற்று திரைப்படத்தின் இசை, முன்னோட்டம் உள்ளிட்ட ஒலிநாடாவை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
இந்நிகழ்வின் போது தியாகி கக்கனின் மகள் கஸ்தூரி பாய், சேலம் சரக காவல்துறை துணைத்தலைவர் எஸ்.ராஜேஸ்வரி மற்றும் இசையமைப்பாளர் தேவா உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும், அமைச்சர் துரைமுருகன், சாமிநாதன், காங்கிரஸ் மாநில தலைவர் கேஎஸ் அழகிரி உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர். சங்கர் மூவிஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் “கக்கன்” திரைப்படத்தை தயாரித்துள்ளது.