ஈஷா சார்பில் தமிழ்நாடு முழுவதும் 150 இடங்களில் இலவச யோகா வகுப்புகளில் ஜனவரி 2, 3 தேதிகளில் நேரில் பங்கேற்கலாம்.
ஆரோக்கியமான, ஆனந்தமான தமிழகத்தை உருவாக்கும் நோக்கத்தில் ஈஷா அறக்கட்டளை சார்பில் தமிழ்நாடு முழுவதும் அனைவருக்கும் இலவசமாக யோகா கற்றுக்கொடுக்கப்பட உள்ளது.
அதன்படி, வரும் ஜனவரி 2, 3 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டில் சுமார் 150-க்கும் மேற்பட்ட இடங்களில் இலவச யோகா வகுப்புகள் நடைபெற உள்ளது. ஈஷா யோகா மையத்தால் பயிற்சி அளிக்கப்பட்ட ஈஷா தன்னார்வலர்கள் இவ்வகுப்பை நேரில் நடத்த உள்ளனர்.
இவ்வகுப்பில் ‘சூர்ய சக்தி’ என்ற எளிய சக்தி வாய்ந்த யோக பயிற்சி கற்றுக்கொடுக்கப்படும். இப்பயிற்சியை தினமும் தொடர்ந்து செய்து வருவதன் மூலம் இதயத்தை பலப்படுத்தி உடலை சுறுசுறுப்பாக்கலாம், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்.
இந்த சூர்ய சக்தி பயிற்சி குறித்து சத்குரு கூறும் போது, “உங்களுக்குள் உள்ள சூரியனை நீங்கள் தூண்டினால், உங்கள் உடல் ஒளி வீசி பிரகாசிக்க துவங்கும்” என கூறியுள்ளார்.
இவ்வகுப்புகள் ஜனவரி 2 மற்றும் 3 தேதிகளில் காலை 6.30 மணி – காலை 8.15 மணி, நண்பகல் 11.30 மணி – 1.15 மணி, மாலை 5.30 மணி – 7.15 மணி என 3 நேரங்களில் நடக்கும். இதில் ஏதேனும் ஒரு நாள் ஒரு நேரத்தை பங்கேற்பாளர்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.
இலவசமாக கற்றுக்கொடுக்கப்படும் இப்பயிற்சியில் 7 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கலந்து கொள்ளலாம். யோகா செய்த முன் அனுபவம் எதுவும் தேவை இல்லை. உங்கள் இருப்பிடத்திற்கு அருகில் நடக்கும் இவ்வகுப்பில் பங்கேற்க Isha.co/SSRD என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்வது அவசியம். முன்பதிவுக்கு உதவி தேவைப்பட்டால் 83000 99555 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.
சென்னை : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் குற்றசாட்டை முன்வைத்து புகார் அளித்து…
சென்னை : நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கி வருகின்ற 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளதாக…
அமெரிக்கா : ரஷ்யா -உக்ரைன் போர் என்பது இன்னும் முடிவுக்கு வராத ஒரு போராக இருந்து வருகிறது. இதன் காரணமாக…
சென்னை : இன்று சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி போட்டி துபாயில் நடைபெறுகிறது. இதில் ரோஹித் சர்மா…
துபாய் : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் அரையிறுதி இன்று துபாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. முதல்…
நாகை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று நாகப்பட்டினத்திற்கு பயணம் மேற்கொண்டிருந்தார். இப்பயணத்தில் நாகை மாவட்டத்தில் முடிவுற்ற திட்டங்கள் தொடங்கி…