5 கிலோ வரை இலவசம்..! தடை செய்த பொருட்களை எடுத்து செல்ல கூடாது – போக்குவரத்துத்துறை உத்தரவு
தடை செய்யப்பட்ட பொருட்களை மாநகர பேருந்தில் எடுத்து செல்ல அனுமதிக்க கூடாது என்று போக்குவரத்துத்துறை உத்தரவு.
பேருந்துகளில் அரசால் தடை செய்யப்பட்ட பொருட்கள், கடத்தல் பொருட்கள், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை அனுமதிக்க கூடாது என மாநகர பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.
மேலும், மாநகர பேருந்துகளில் பயணி ஒருவர் 5 கிலோ எடை வரையிலான பொருட்களை கட்டணமின்றி எடுத்து செல்ல அனுமதிக்கலாம். 5 முதல் 20 கிலோ வரை எடையுள்ள பொருட்களுக்கு சுமை கட்டணமாக ரூ.10 அல்லது ஒரு பயணிக்கான கட்டணம் செலுத்த வேண்டும் என்றுள்ளனர்.
அதிக இடத்தை ஆக்கிரமித்து மற்ற பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பெரிய சுமைகளை ஏற்ற அனுமதிக்க கூடாது. பயணிகள் இல்லாத சுமைகளை மாநகர பேருந்தில் ஏற்ற அனுமதிக்கக்கூடாது என்றும் போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், செய்தித்தாள்கள் மற்றும் தபால்களை கொண்டு செல்ல முன் அனுமதி பெற வேண்டும் எனவும் போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.