JEE நுழைவுத் தேர்வு இல்லாமல் ஐஐடி மெட்ராஸில் BS டிகிரி படிக்க இலவசம்.! என்ன தகுதி?
IITMadras : JEE நுழைவுத் தேர்வு இல்லாமல் ஐஐடி மெட்ராஸ் -ல் இலவசமாக BS பட்டப்படிப்பு படிக்க ஒரு அறிய வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஆம், அதற்கு ஐஐடி மெட்ராஸ் நடத்தும் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றால் போதுமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வழிகாட்டி நிகழ்ச்சி நாளை (மே 12) அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது.
இந்நிலையில், இதில் விருப்பமுள்ள 11, 12ம் வகுப்பு மற்றும் கல்லூரி மாணவர்கள் பெற்றோருடன் நாளை கலந்துகொள்ளலாம். இதற்கான அனுமதியும் இலவசம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியான அறிக்கையில், “இந்தியாவின் மதிப்புமிக்க ஐஐடி மெட்ராஸ் நிறுவனத்தில் கல்வி பயிலும் வாய்பை நிறைவேற்ற, JEE நுழைவுத் தேர்வு இல்லாமல் ஐஐடி மெட்ராஸ் வழங்கும் BS பட்டப்படிப்பு பயில தாட்கோ மற்றும் தமிழ்நாடு தன்னார்வலர்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்.
தகுதித் தேர்வின் அடிப்படையில் BS பட்டப்படிப்பில் சேர்க்கை பெறும் மாணவர்கள் படிக்கும் காலத்திலேயே வேறு ஒரு கல்லூரியில் தங்களது விருப்பமான பட்டப்படிப்பினை படித்துக் கொண்டே BS பட்டப்படிப்பினை பயிலலாம்.
இப்படிப்பிற்கான கல்விக் கட்டணமானது சென்னை ஐஐடி மற்றும் தாட்கோவால் இணைந்து வழங்கப்படுகிறது. தமிழ்நாடு தன்னார்வலர்கள் அமைப்பு மூலம் பயில்வதற்கான வழிகாட்டுதல் வழங்கப்படுகிறது.12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள், மற்றும் கல்வித்தகுதியை மேம்படுத்த விரும்பும் அனைவரும் இந்த வாய்பினை பயன்படுத்தி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பு: விண்ணப்பம் பதிவு செய்ய கடைசி நாள் மே 20, 2024 அன்று என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், BS பட்டப் படிப்பு குறித்த தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளமான https://iei.tahdco.com/iit_reg.php என்ற இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம்.