தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை.! தமிழ், ஆங்கிலத்தில் விளம்பரப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.!

Default Image

தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி சேர்க்கை திட்டத்தில் இலவச மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் விளம்பரப்படுத்துமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி சேர்க்கை அதாவது 25% இடங்களுக்கு இலவச மாணவர் சேர்க்கை ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறுவது வழக்கம். ஆனால் தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக ஆன்லைன் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. ஆனால் RTE திட்டத்திற்கான இலவச மாணவர் சேர்க்கைக்கான கால அட்டவணை இன்னும் வெளியிடப்படவில்லை என்று ஆகஸ்ட் மாத முதல் வாரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது கால அட்டவணையை வெளியிட கூறி உத்தரவிடப்பட்டது. அதன்படி, ஆகஸ்ட் 27 ஆம் தேதி முதல் செப்டம்பர் 25 ஆம் தேதி வரை தனியார் பள்ளிகளில் உள்ள 25% இடங்களுக்கான இலவச மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டதாக தமிழக அரசு சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து கட்டாய கல்வி சேர்க்கை திட்டம் குறித்து போதிய விழிப்புணர்வு மக்களிடையே இல்லாத காரணத்தால், அது குறித்த விளம்பரத்தை ஆங்கில மற்றும் தமிழ் செய்திதாள்களில் வெளியிட வேண்டும் என்றும், மாணவர் சேர்க்கையை கண்காணிப்பதற்காக தனி கண்காணிப்பு குழு ஒன்றை அமைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

அது மட்டுமின்றி, RTE திட்டத்தின் கீழ் உள்ள காலியான இடங்களில் வேறு மாணவர்களை சேர்க்க கூடாது எனவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்