பள்ளி மாணவர்களுக்கு செருப்புக்கு பதில் இனி இலவச ஷு வழங்கப்படும்- அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு
பள்ளி மாணவ, மாணவிகளுக்கு செருப்புக்கு பதில் இலவச ஷு வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் செங்கோட்டையன்தெரிவித்துள்ளார்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகின்றது.இந்த திட்டங்கள் மாணவர்களுக்கும் பயனளிக்கும் வகையில் உள்ளது .
அந்த வகையில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,நடப்பு கல்வியாண்டில் 11, 12-ம் வகுப்பு படிக்கும் 10 லட்சத்து 40 ஆயிரம் மாணவா்களுக்கு இம்மாத இறுதிக்குள் மடிக்கணினிகள் வழங்கப்படும். 2017 – 2018-ம் ஆண்டு 12-ம் வகுப்பு படித்த மாணவா்களுக்கு 3 மாத காலத்தில் மடிக்கணினி வழங்கப்படும் .
நடப்பு கல்வியாண்டில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு செருப்புக்கு பதில் இலவச ஷு வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என்று கூறினார் .மேலும் மாணவர்களுக்கு ‘யூ டியூப்’ பாடத்திட்டம் அடுத்த மாதம் உருவாக்கப்படும் என்றும் வகுப்பறையில் நடத்தும் பாடங்கள் யூ டியூப்பில் பதிவேற்றம் செய்யப்படும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் செங்கோட்டையன் கூறியுள்ளார்.