#BREAKING : நவம்பர் மாதம் வரை ரேஷனில் இலவச அரிசி – தமிழக அரசு அறிவிப்பு
நவம்பர் மாதம் வரை ரேசன் கார்டுதாரர்களுக்கு விலையில்லாமல் அரிசி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஏப்ரல் விலையில்லா அரிசி, சர்க்கரை பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் தொடர்ந்து மே மற்றும் ஜூன் மாதத்திலும் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டது.
பின் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜூலை மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் அதாவது ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ துவரம்பருப்பு, ஒரு லிட்டர் சமையல் எண்ணெய், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் வழங்கிய அரிசி அளவின்படி கூடுதல் அரிசியுடன் நியாயவிலைக் கடைகளில் விலை இன்றி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. எனவே ஜூலை 1 முதல் 3 வரை பணம் கொடுத்து பொருள் பெற்றவர்களுக்கு அடுத்த மாதம் ஈடு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நவம்பர் மாதம் வரை அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நபர் ஒன்றுக்கு ஐந்து கிலோ அரிசி கூடுதலாக வழங்கப்படும் என்பதை கருத்தில் கொண்டு நவம்பர் மாதம் வரை விலையின்றி அரிசி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஏப்ரல், மே, ஜூன், ஜூலை மாதங்களில் வழங்கப்பட்ட அளவின் படி நவம்பர் மாதம் வரை விலையில்லாமல் அரிசி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.