ரேஷன் கடைகளில் இலவச மாஸ்க்! அமைச்சர் காமராஜ் தலைமையில் ஆலோசனை!

ரேஷன் கடைகளில் இலவசமாக மாஸ்க் வழங்குவது பற்றி அமைச்சர் காமராஜ் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் இதுவரை, இந்த வைரஸ் பாதிப்பால், 34,194 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 307 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து மக்களை மீட்டெடுக்க அரசு பல நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிற நிலையில், பொது மாக்கள் வெளியே வரும் போது கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், ரேஷன் கடைகளில் இலவசமாக மாஸ்க் வழங்குவது பற்றி அமைச்சர் காமராஜ் தலைமைச் செயலகத்தில் உணவுத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.