பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப்..! அமைச்சர் அன்பில் மகேஷ் அசத்தல் அறிவிப்பு..!

தமிழ்நாடு அரசின் நிதி நிலைமை சரியானதும் மாணவர்களுக்கு விலையில்லா லேப்டாப் வழங்கப்படும் என அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் கடந்த ஏப்ரல் மாதம் 29ம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. ஆனால், கோடை வெயில் தாக்கம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், ஜூன் 7 ஆம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியாகி இருந்தது.
பின்னர், ஜூன் 12 ஆம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு, 2023-24 ஆம் கல்வியாண்டிற்கான வகுப்புகள் இன்று முதல் தொடங்குகின்றன. மேலும், இந்த கல்வியாண்டில் பாடங்களை விரைவாக முடிக்க சனிக்கிழமைகளிலும் வகுப்புகள் நடத்த திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், செய்தியாளர்கள் சந்திப்பில் இலவச மடிக்கணினி எப்பொழுது வழங்கப்படும் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், முன்பு கூறியது போல தமிழ்நாடு அரசின் நிதி நிலைமை சரியானதும், அனைத்து தன்மைகளும் ஆராய்ந்து மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.