இலவச ஐ.ஏ.எஸ். பயிற்சிக்கான தேர்வு நடைபெற்றது..
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ,சிகரம் அறக்கட்டளை சார்பில் இலவச ஐ.ஏ.எஸ். பயிற்சிக்கான தேர்வு நடைபெற்றது.
சிகரம் அறக்கட்டளை சார்பில் ஏழை மாணவர்களுக்கு ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு தயாராவதற்கான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
தற்போது கல்லூரி படிப்பை முடித்த மாணவ, மாணவியர்களுக்கு இலவச பயிற்சி வழங்கும் வகையில் கோவை, சேலம், கரூர், மதுரை, ஈரோடு ஆகிய பகுதிகளில் தேர்வு நடைபெற்றது.
இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து 2,450 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தேர்வெழுதினர்.
இந்த தேர்வில் வெற்றி பெரும் மாணவர்களுக்கு சிகரம் அறக்கட்டளை மூலம் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு இலவசமாக பயிற்சி அளிக்கப்படும் என சிகரம் அறக்கட்டளை நிர்வாகிகள் கூறியுள்ளனர்.