உற்சாகத்தில் முருக பக்தர்கள்! அறுபடை வீடுகளுக்கு அரசு சார்பில் இலவச சுற்றுலா – இன்று முதல் விண்ணப்பம்!

ArupadaiVeedu

தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளுக்கு அரசு சார்பில் இலவச சுற்றுலா செல்ல இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் சார்பில், தமிழகத்தில் உள்ள முருகனின் அறுபடை வீடுகளுக்கும் மூத்த குடிமக்களை இலவச ஆன்மிக சுற்றுலா அழைத்து செல்ல உள்ளதாக சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியிருந்தார்.

அதன்படி, முருகனின் அறுபடை வீடுகளாக உள்ள திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய திருத்தலங்களுக்கு 60 வயது முதல் 70 வயதிற்கு உட்பட்ட 200 பக்தர்களை ஆண்டிற்கு 5 முறை கட்டணமில்லாமல் ஆன்மிக சுற்றுலா அழைத்து செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம் ஆண்டுக்கு 1,000 பக்தர்கள் அழைத்துச்சென்று தரிசனம் செய்து வைக்கப்படும்.

தமிழ்நாட்டில் நாளை முதல் பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

இந்த முயற்சி இந்து சமய அறநிலையத் துறையால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, அறுபடை வீடுகளுக்கான முதற்கட்ட பயணம் ஜனவரி 28ம் தேதி தொடங்கும் நிலையில், தமிழகத்தில் 60 முதல் 70 வயதுடையோர் அறநிலையத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இன்று முதல் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதில், தகுதி உடைய 200 விண்ணப்பதாரர்கள் முதற்கட்டமாக முருகனின் அறுபடை வீடுகளுக்கு ஆன்மிக சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். மீதமுள்ள தகுதி உடைய விண்ணப்பதாரர்கள் அடுத்தடுத்த ஆன்மிக பயணங்களில் அழைத்துச் செல்லப்படுவர் என அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். இந்து சமய அறநிலையத் துறையின் இந்த செயல்பட்டால் முருக பக்தர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil news live
rain update news today
UdhayanidhiStalin
Chennai Super Kings IPL Auction
India won the Test Match
Heavy Rain - cyclone
meena (10) (1)