சென்னையில் குடிசையில் வாழும் மக்களுக்கு இலவச உணவு! முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!

சென்னையில் குடிசைப் பகுதியில் வாழும் மக்களுக்கு, நாளை முதல் டிசம்பர் 13ஆம் தேதி இரவு வரை இலவச உணவு வழங்க முதல்வர் உத்தரவு.
கடந்த சில நாட்களாக நிவர் மற்றும் புரவி புயல் காரணமாக சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மழை காரணமாக சென்னையில் பல இடங்களில் மழை பெய்துள்ளதால், வீடுகள் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. குடிசை பகுதியில் வாழும் மக்களின் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால், அவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
இந்நிலையில், சென்னையில் குடிசைப் பகுதியில் வாழும் மக்களுக்கு, நாளை காலை உணவு தொடங்கி டிசம்பர் 13ஆம் தேதி இரவு வரை இலவச உணவு வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி, சென்னையில், 5.3 லட்சம் குடும்பங்கள் குடிசையில் வசித்து வருகிற நிலையில், 26 லட்சம் மக்களுக்கு நாளாய் இலவச உணவளிக்க சென்னை மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது. சமுதாய நலக் கூடங்கள், அம்மா உணவகங்கள் மூலம் மூன்று வேளையும் உணவளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
“ஆமாம்., நாங்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்தோம்!” பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு பேட்டி!
April 25, 2025
பதிப்புரிமை வழக்கில் சிக்கிய ஏ.ஆர்.ரஹ்மான் – ரூ. 2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.!
April 25, 2025