அம்மா உணவகத்தில் வெளிமாநில தொழிலாளிகளுக்கு இலவச உணவு!

சீனாவை தொடர்ந்து பல நாடுகளில் கொரோனா வைரஸ் நோயானது பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தற்போது இதன் பாதிப்பு இந்தியாவிலும் பரவி வருகிற நிலையில், இதனை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்திய அரசு ஏற்படுத்தி வருகிறது.
இதனையடுத்து, இந்திய அரசு 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் வெளி மாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல இயலாமல் தவித்து வருகின்றனர். ரேஷன் கார்டு இல்லாமல், உணவிற்கு பணமின்றி தவிக்கும் வெளி மாநில தொழிலாளர்கள், பெயர் மற்றும் ஆதார் எண்ணை, அருகே உள்ள அம்மா உணவகங்களில் பதிவு செய்து, இலவசமாக உணவு பெற்று கொள்ளலாம் என திருவொற்றியூர் மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.