மீண்டும் ஊரடங்கு அமலாகும் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் அம்மா உணவகங்களில் மீண்டும் விலையில்லாமல் உணவு வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.குறிப்பாக சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகம் இருந்து வருகிறது.எனவே சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் வரும் ஜூன் 19 தேதி முதல் 12 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டது.
சென்னையில் நாளை முதல் ஜூன் 30ந் தேதி வரை அம்மா உணவகங்களில் விலையில்லாமல் உணவு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,தமிழ்நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்பு ,ஏழை எளிய மக்களின் நலன் கருதி அம்மா உணவகங்களில் வழங்கப்படும் உணவு விலையில்லாமல் மே 31 -ஆம் தேதி வரை வழங்கப்பட்டு வந்தது.தற்போது சென்னை பெருநகர காவல்த்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் மற்றும் சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களில் உள்ள சில பகுதிகளிலும் தீவிர ஊரடங்கு இன்று நள்ளிரவு முதல் அமல்படுத்தப்பட உள்ள நிலையில்,இப்பகுதிகளில் செயல்படும் அனைத்து அம்மா உணவகங்களிலும் விலையில்லாமல் உணவு வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.மேலும் ,முதியோர் ,நோயுற்றோர் மற்றும் ஆதரவற்றோர்களின் நலன் கருதி ,தற்போது இயங்கி வரும் சமூதாய உணவு கூடங்கள் மூலம் தயாரிக்கப்பட்டு அவர்களின் இல்லங்களுக்குச் சென்று விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் இப்பகுதிகளில் உள்ள சமுதாய சமையல் கூடங்களை மேலும் வலுப்படுத்தி ,போதுமான அளவு உணவை சமயல் செய்து ,இந்த உணவை தேவைப்படும் முதியோர் ,நோயுற்றோர் மற்றும் ஆதரவற்றோர்களின் இல்லங்களுக்கே சென்று வழங்கவும் நான் ஆணையிட்டுளேன். இந்த நடைமுறை நாளை முதல் 31-ஆம் தேதி வரை செயல்பாட்டில் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : ஐபிஎல்லின் இன்றைய லீக் போட்டியில் சென்னை, பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7…
விசாகப்பட்டினம் : ஆந்திராவின் விசாகப்பட்டினம் அருகே உள்ள சிம்மாச்சலம் ஸ்ரீ நரசிம்ம சுவாமி கோயில் சந்தன உற்சவ விழாவின்போது சுவர்…
டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…