ரத்தம் தெறிக்கும் ஃப்ரீ ஃபயர்… தடை செய்ய முடியவில்லை.! உயர்நீதிமன்றம் வேதனை.!
ஃப்ரீ ஃபயர் ஆன்லைன் விளையாட்டில் அதிகமாக ரத்தம் தெறிக்கும் காட்சிகள் குழந்தைகளை பாதிக்கும் வகையில் இருக்கின்றது என மதுரை உயர்நீதிமன்ற கிளை வேதனை தெரிவித்துள்ளது.
ஆன்லைன் விளையாட்டுக்கு தற்காலத்து இளைஞர்கள் அடிமையாகி வருகின்றனர். இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது தான் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை கேட்டு குரல் வலுத்து வருகிறது.
இந்நிலையில், இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளை இந்த ஆன்லைன் விளையாட்டு, குறிப்பாக ஃப்ரீ ஃபயர் விளையாட்டு குறித்து கருத்து தெரிவித்து உள்ளது.
மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் நிஷா பானு, ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு, ‘ ஃப்ரீ ஃபயர் விளையாட்டில் ரத்தம் தெறிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இது குழந்தைகளிடையே வன்முறையை தூண்டுகிறது.
தற்போதுள்ள தொழில்நுட்ப வளர்ச்சி காலத்தில் ஆன்லைன் விளையாட்டை முழுவதுமாக தடை செய்வது இயலாத காரணமாக மாறிவிட்டது. வெவ்வேறு பெயர்களை
ரத்தம் தெறிக்கும் காட்சிகள் குழந்தைகளை வன்முனையினை தூண்டுகிறது. ஆன்லைன் விளையாட்டை தடை செய்வது இயலாததாகவே இருக்கிறது. தற்போது செல்போன் பயன்பாடு அனைவர் மத்தியிலும் அதிகரித்து காணப்படுகிறது. அதில் பெரும்பாலானோர் மூழ்கி விடுகின்றனர். ‘ என வேதனையுடன் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி அமர்வு நீதிபதிகள் வேதனையுடன் தங்கள் கருத்தை தெரிவித்துள்ளனர்.