பாதுகாப்பான முககவசங்களை வழங்காமல் நாடா துணியில் தயாரித்ததை வழங்கினார்கள் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் குற்றசாட்டு.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், கடந்த அதிமுக ஆட்சியில் வழங்கிய இலவச முக கவசங்கள் தரமற்றவை என்றும் பாதுகாப்பான முககவசங்களை வழங்காமல் நாடா துணியில் தயாரித்ததை வழங்கினார்கள் எனவும் குற்றசாட்டியுள்ளார்.
தரமற்ற முகக்கவசம் விநியோகம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. தரமான இலவச முகக்கவசம் வழங்குவதற்கான ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். தனியாரில் இலவச தடுப்பூசி முகாமை வரும் புதன்கிழமை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் துவக்கி வைக்க உள்ளதாகவும் கூறினார்.
மேலும், சட்டத்திற்கு புறம்பாக மதுபான பார்கள் நடத்தினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பாதுகாப்பு கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்காமல் பார் நடத்தினால் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை விரைவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…