பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டதாக கருதப்படும் பெண் குழந்தைகளுக்கான இலவச அவசர தொலைபேசி எண்..!
பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டதாக கருதப்படும் பெண் குழந்தைகள் ‘1098’ என்ற இலவச அவசர தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
சமீபத்தில் கரூர் மாவட்டம், வெண்ணெய் மலையில் உள்ள தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்த 17 வயது பள்ளி மாணவி பள்ளி முடிந்து வீடு திரும்பிய நிலையில், வீட்டில் யாரும் இல்லாத போது, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவலறிந்து வந்த, போலீசார் மாணவியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அப்போது மாணவி கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். அதில் sexual harrasment ஆல சாகுர கடைசி பொண்ணு நான் ஆ தான் இருக்கனும். என்ன யார் இந்த முடிவ எடுக்க வச்சான்னு நான் சொல்ல பயமா இருக்கு.
இந்த பூமில வாழனும்னு ஆச பட்டேன். ஆனா இப்போ பாதிலயே போறான். இன்னெரு தடவ இந்த உலகத்துல வாழ வாய்ப்பு கெடச்சா நல்லா இருக்கும். பெருசாகி நிறைய பேத்துக்கு help பண்ணனும்னு ஆச ஆனா முடியாதில்ல. I love you Amma, chithappa, manimama, ammu உங்க எல்லாரையும் எனக்கு ரொம்ப புடிக்கும். ஆனா நான் உங்ககிட்டலாம் சொல்லாம போறேன். மன்னிச்சிருங்க . இனி எந்த ஒரு பொண்ணும் என்ன மாதிரி சாகக்கூடாது என மாணவி உருக்கமாக கடிதம் எழுதியுள்ளார்.
இதனை அடுத்து தற்போது கரூர் மாவட்ட ஆட்சியர் பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டதாக கருதப்படும் பெண் குழந்தைகள் மாவட்ட நிர்வாகத்தின் உதவியை நாடுவதற்கு ‘1098’ என்ற இலவச அவரச தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று வெளியிட்டுள்ளார். மேலும், உதவிகளுக்கு ‘89033 31098’ என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளார்.