50,000 விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கும் திட்ட தொடக்க விழாவில் முதலமைச்சர் முக ஸ்டாலின் உரை.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் 50,000 விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வின்போது தமிழகத்தில் மேலும், 50,000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தில் 20,000 பேருக்கு ஆணை வழங்கினார். இதன்பின் பேசிய முதலமைச்சர், பெய்யும் மழையால் மண் குளிர்ந்து கொண்டிருக்கிறது.
என் மனமும் குளிர்ந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே, ஒரு லட்சம் இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது மேலும், 50,000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கபடுகிறது. 15 மாதங்களில் மொத்தம் ஒன்றரை இலவச மின் இணைப்புகள், மண்ணை காக்கும் விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்பு வழங்குவதன் மூலம் என் மணமும் குளிர்ந்து கொண்டிருக்கிறது.
இந்தியாவில் வேறு எந்த மாநில அரசும் செய்யாத சாதனையை தமிழக அரசு செய்துள்ளது. தமிழக அரசின் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும் நாள் இந்த நாள். இதற்கு முன் எந்த அரசும் இப்படியொரு சாதனையை செய்தது கிடையாது. ஒரு திட்டத்தை சொல்லிவிட்டு போகிறவர்கள் அல்ல, செயல்படுத்தும் அரசு தமிழ்நாடு அரசு. முடியாது என சொல்வதை முடித்து காட்டுவது திமுக அரசு.
இலவச மின் இணைப்பு திட்டத்தில் வேளாண் உற்பத்தி அதிகரிக்கும். தமிழகத்தின் மொத்த மின் உற்பத்தி திறன் 34,867 மெகாவாட், 2030 ஆம் ஆண்டில் தமிழகத்தின் மின் உற்பத்தி திறன் 65,360 மெகாவாட்டாக உயரும். மின் உற்பத்தியில் இந்தியாவில் தமிழகம் முதலிடம் பிடிக்கும். கடந்த 10 ஆண்டுகளாக ஒரு ஆட்சி இருந்தது. அவர்கள் கொடுத்தது வெறும் 2 லட்சம் மின் இணைப்பு தான் என தெரிவித்தார்.
ஆனால் நாங்கள் ஒன்றரை வருட ஆட்சியில் ஒன்றரை லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு கொடுத்தோம். எங்கள் நம்பி வாக்களித்த மக்களுக்கு நம்பிக்கையாக இருக்கிறோம் எனவும் கூறினார். மேலும், தொழிற்துறையில் திமுக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. திமுக ஆட்சியில் பெண்களின் பொருளாதார வலிமை கூடியுள்ளது. மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் விலைவாசி குறைவாக உள்ளது எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டார்.
சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த பாலியல்…
சென்னை :திருவாதிரை ஸ்பெஷல் களி ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி-…
சென்னை: நடிகை நயன்தாராவின் 'Beyond the Fairy Tale' ஆவணப்படத்தில் 'நானும் ரவுடி தான்' படத்தின் காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாகக்…
சென்னை: ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிப்பில் 'KGF 2' திரைப்படம் கடந்த 2022ம் ஆண்டு வெளியானதைத் தொடர்ந்து அவரது அடுத்த…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த…
சென்னை: மகளிருக்காக தமிழக அரசு சார்பில் 'கலைஞர் மகளிர் உரிமைத்தொகை' திட்டதின் கீழ், ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி மகளிர்…