சரியாக எத்தனை பேர் இருக்கிறார்கள் என உபயோகிப்பாளர் கணக்குகளை சரிபார்க்க மட்டுமே ஆதார் எண் இணைக்கப்படுகிறது. – அமைச்சர் செந்தில் பாலாஜி.
மழைக்காலத்தில் தமிழ்நாடு மின்சாரத்துறை சார்பில் சென்னையில் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், மீட்டர் வரையில் மட்டுமே மின்சாரத்துறை பொறுப்பு. அதற்கு பிறகு உரிமையாளர்கள் தான் ஜாக்கிரதையாக தங்கள் வீட்டில் மின் சாதனங்களை கட்டமைக்க வேண்டும். என குறிப்பிட்டார்.
மேலும், சென்னையில் இதுவரை 3000க்கும் அதிகமான பில்லர் பாக்ஸ் 1 மீ அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. 16 மின்மாற்றிகள் (டிரான்ஸ்பார்மர்) உயர்த்தி விட்டோம். என மழைநீர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பேசினார்.
அதன் பிறகு, மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க சொல்வதால் 100 யூனிட் மின்சார இலவசம் தடுக்கப்படும் என பொய்யான தகவல் பரவி வருகிறது. அது அப்படி இல்லை. இது கணக்கு வழக்குக்காக மட்டுமே. பலர் தங்கள் இறந்து போன தந்தை, தாய் பெயரில் இன்னும் பெயர் மாற்றாமல் உபயோகித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல், சரியாக எதனை பேர் இருக்கிறார்கள் என உபயோகிப்பாளர் கணக்குகளை சரிபார்க்க மட்டுமே இந்த நடவடிக்கை என குறிப்பிட்டு பேசினார் அமைச்சர் செந்தில் பாலாஜி.
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…
பெர்த் : பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டி இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ்…
சென்னை : 2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாள்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2025-ஆம்…