எந்த காரணத்தை கொண்டும் இலவச மிதிவண்டி வழங்கும் திட்டம் நிறுத்தப்படாது-அமைச்சர் செங்கோட்டையன்

வேலூரில் நடைபெறவுள்ள மக்களவை தேர்தலை முன்னிட்டு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அங்கு பிரசாரம் செய்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், மாணவர் எண்ணிக்கையை காரணம் காட்டி, எந்த அரசு பள்ளியையும் மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை.
எந்த காரணத்தை கொண்டும் இலவச மிதிவண்டி வழங்கும் திட்டம் நிறுத்தப்படாது. குறைவான மாணவர் எண்ணிக்கை காட்டி, எந்தப் பள்ளியும் மூடப்படாது என்றார். மடிக்கணினி மற்றும் மிதிவண்டி வழங்கும் திட்டம், ஜெயலலிதாவால் கொண்டுவரப்பட்டது என்றும் எனவே, திட்டத்தை நிறுத்தப்படவே மாட்டாது . பதினொன்று மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு விரைவில், இலவச மிதிவண்டி வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.