‘மோசடி அழைப்புகள்’ – இந்த அழைப்புகளை நம்பி ஏமாறாதீர்கள் – காவல்துறை
இணையங்களில் வரும் கடன் செயலிகள் மூலம் யாரும் கடன் வாங்க வேண்டாம் என்று சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார்.
இன்று பலர் மொபைலில் குறுந்செய்தி அனுப்புவதன் மூலமாகவும், அழைப்புகள் மூலமாகவும் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், இது போன்ற அழைப்புகளை நம்பி ஏமாற வேண்டாம் என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், pan card, kyc update கோரும் sms-க்கள், otp கேட்கும் போன் அழைப்புகளை நம்ப வேண்டாம். sms-ல் வரும் லிங்க்-ஐ கிளிக் செய்ய வேண்டாம். அதிலுள்ள மொபைல் எண்ணுக்கு போன் செய்ய வேண்டாம். app-களில் பொருளை விற்கும் போது, QR கோர்ட்டை ஸ்கேன் செய்ய வேண்டாம் என்றும், கிரிப்டோ வர்த்தகம், வாட்ஸாப்க்களில் வரும் தகவல்களை நம்பி யாருக்கும் பணம் அனுப்ப வேண்டாம் என்றும், இணையங்களில் வரும் கடன் செயலிகள் மூலம் யாரும் கடன் வாங்க வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.