தமிழகத்தில் போலி ஐஏஎஸ் அதிகாரி கைது.! லட்சக்கணக்கில் பண மோசடி அம்பலம்.!
ராமநாதபுரத்தில் தன் மகனுக்காக ஒருவர் போலி ஐஏஎஸ் அதிகாரியிடம் 15 லட்சம் ரூபாய் அளவுக்கு பணம் கொடுத்து ஏமாந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
ராமநாதபுரத்தினை சேர்ந்த ரவி என்பவர் மாவட்ட குற்றவியல் காவல்துறையினரிடம் புகார் அளித்திருந்தார். அதாவது, ஜார்ஜ் பிலிப்ஸ் மற்றும் நாவப்பன் ஆகிய இருவரும் தாங்கள் ஐஏஎஸ் அதிகாரிகள் என கூறிக்கொண்டு, அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 15 லட்சம் ரூபாய் வரையில் ஏமாற்றி விட்டதாக புகாரில் தெரிவித்துள்ளார்.
இந்த புகாரை அடுத்து, நாவப்பனை சென்னை போலீசார் கைது செய்துள்ளனர். நாவப்பன் மீது, 406 மற்றும் 420 ஆகிய இரு பிரிவுகளின் கீழ் கைது செய்துள்ளனர். மேலும், ஒருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றார்.