மோசடி வழக்கு ! செந்தில் பாலாஜி இன்று ஆஜராக உத்தரவு

Published by
Venu
செந்தில் பாலாஜி  இன்று ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜி அதிமுகவில் கடந்த 2011-2015-ம் ஆண்டு போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர். ஜெயலலிதா இறந்த பின்னர் அமமுக கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்தார்.இதையெடுத்து அமமுக கட்சியிலிருந்து விலகி ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார்.இவர் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது 16 பேருக்கு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி லட்சம் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது.இது தொடர்பாக குற்றபிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது மோசடி செய்ததாக புகார் எழுந்த நிலையில் கரூரில் ராமேஸ்வரபட்டியில் உள்ள செந்தில் பாலாஜியின் வீட்டில் கடந்த 31-ஆம் தேதி சென்னை குற்றப்பிரிவு போலீஸ் சோதனை நடத்தினர்.
மேலும் செந்தில் பாலாஜியின் ஜவுளி ஏற்றுமதி அலுவலகம் மற்றும் அவரின் தம்பி அசோக் வீட்டிலும் வீட்டில் சோதனை நடத்தி நடத்தினர். இதற்கு இடையில் மத்திய குற்றபிரிவு போலீசார் பதிவு செய்த வழக்கில் செந்தில் பாலாஜி உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார்.இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தது. தேவைப்படும்போது மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்பு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து செந்தில் பாலாஜி பாஸ்போர்ட்டை காவல்துறையிடம் ஒப்படைக்கவும், மற்றும் தினமும் கையெழுதியிடவும் நிபந்தனை விதித்தது உயர்நீதிமன்றம்.

இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்பி, எம்எல்ஏக்கள் தொடர்பான, வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.பின்னர்  இன்று (மார்ச் 3-ஆம் தேதி) செந்தில் பாலாஜி ஆஜராக உத்தரவு பிறப்பித்து வழக்கினை அன்றைய தினத்திற்கு ஒத்திவைத்து.மேலும் செந்தில் பாலாஜியுடன் அன்னராஜ், பிரபுவும் ஆஜராக உத்தரவு பிறப்பித்தது நீதிமன்றம்.

Published by
Venu

Recent Posts

தெலுங்கு மக்களிடம் மன்னிப்புக் கோரினார் நடிகை கஸ்தூரி!

தெலுங்கு மக்களிடம் மன்னிப்புக் கோரினார் நடிகை கஸ்தூரி!

சென்னை : தெலுங்கு பேசும் மக்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்கு நடிகை கஸ்தூரி பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார். தெலுங்கர்கள் அந்தப்புரத்து…

33 mins ago

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் – தேதி அறிவிப்பு!

டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இம்மாதம் 25-ஆம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற விவாகாரங்கள் துறை அமைச்சர் கிரண்…

1 hour ago

அமெரிக்க அதிபர் தேர்தல் தொடக்கம்! புதிய அதிபர் டிரம்பா? கமலா ஹாரிஸா?

அமெரிக்கா : உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு இந்திய நேரப்படி சரியாக மாலை…

2 hours ago

இது நம்ம லிஸ்ட்லயே இல்ல! ரிஷப் பண்டுக்கு கொக்கி போடும் பஞ்சாப்!

மும்பை : டெல்லி அணி நிர்வாகம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக விளையாடி வந்த ரிஷப் பண்டை…

2 hours ago

இஞ்சி தேன் சாப்பிடுவதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா ?

இஞ்சி தேன் சாப்பிடுவதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா ? சென்னை -இஞ்சி தேன் சாப்பிடுவதால் நம் உடலுக்கு ஏற்படும் ஆரோக்கிய…

2 hours ago

2036 ஒலிம்பிக்.. இந்தியாவில் நடத்த IOA விருப்பம்!

டெல்லி : வரும் 2036-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த சர்வதேச ஒலிம்பிக்…

3 hours ago