மோசடி வழக்கு: சசிகலா நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு…!உயர்நீதிமன்றம் உத்தரவு
மோசடி வழக்கில் சசிகலா எழும்பூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தனியார் தொலைக்காட்சிக்கு வெளிநாட்டில் இருந்து உபகரணங்களை வாங்கியதில் முறைகேடு என்ற வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் வழக்கு தொடர்பாக சிறையில் உள்ள சசிகலாவிடம் விசாரிக்க அனுமதி கோரி கர்நாடக சிறைத்துறையிடம் வருமானவரித்துறை அனுமதி கேட்டது.
இதன்பின் சசிகலாவை டிசம்பர் 13,14ஆம் தேதிகளில் வருமானவரித்துறை விசாரிக்க கர்நாடக சிறைத்துறை அனுமதி அளித்தது .
இந்நிலையில் வழக்கில் சசிகலா எழும்பூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.காணொலி காட்சி மூலம் சசிகலா விசாரணைக்கு ஆஜராக உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.