போலி பணி நியமன ஆணை வழங்கி பண மோசடி ! அரசு மருத்துவமனை உதவியாளர் கைது!

Published by
அகில் R

தருமபுரி: தருமபுரி அருகே மருத்துவமனையில் உதவியாளர் பணிக்கு போலியாக பணி நியமன ஆணை கொடுத்த மருத்துவமனை உதவியாளர் கைது. இவர் வேலை வாங்கித் தருவதாக பல பேரிடம் லட்சக்கணக்கில் பணம் மோசடி செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. தருமபுரி மாவட்டம் கடத்தூர் அடுத்த மடதள்ளி கிராமத்தைச் சார்ந்த அதியமான் என்பவர் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியர்களின் உதவியாளராக பணிபுரிந்து வந்துள்ளார்.

இவர், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் போது, மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின், உறவினர்களோடு நன்றாக பேசி அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள் செய்து வந்துள்ளார். மேலும் தனக்கு மருத்துவத் துறை அதிகாரிகள் மற்றும் நீதித்துறை அதிகாரிகளை தெரியும் என்றும் அவர்களின் மூலமாக அரசு வேலைகள் வாங்கித் தர முடியும் என ஆசை வார்த்தை கூறி பலரை ஏமாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாப்பாரப்பட்டி அடுத்த ஆலமரத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் சமதர்மன் என்பவரின் மனைவி அகிலா, தனது தந்தையின் சிகிச்சைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்துள்ளார். அப்போது, அவரிடம் அதியமான் மருத்துவமனையில் சிறு சிறு உதவிகளை செய்து கொடுத்துள்ளார். இதையடுத்து போன் நம்பரை வாங்கிக் கொண்டு அடிக்கடி பேசியதில், இருவருக்குள் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அகிலாவுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி ரூ.7 லட்சம் பணம் பெற்றுள்ளார். மேலும் அகிலாவின் உறவினர் ஒருவருக்கு அரசு மருத்துவமனையில் உதவியாளர் பணிக்கு ஆள் தேவைப்படுவதாக கூறி, ரூ.4 லட்சம் பணம் பெற்றுக் கொண்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அலுவலக உதவியாளர் பணிக்கான பணி நியமன ஆணையை போலியாக தயாரித்து வழங்கியுள்ளார்.

இதனை தொடர்ந்து பணி நியமன ஆணை போலியான என தெரியவந்ததும் அகிலாவுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அகிலா, தனது பிள்ளைகளை அழைத்துக் கொண்டு அதியமானுடன் திருப்பூர் சென்று வாடகை வீட்டில் தங்கி இருந்துள்ளனர். இந்த நிலையில் மனைவி மற்றும் குழந்தைகளை அதியமான் கடத்திச் சென்றதாக அகிலாவின் கணவரான ராணுவ வீரர் சமதர்மன் பாப்பாரப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனை தொடர்ந்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில், அதியமான் ராணுவ வீரரின் மனைவி மற்றும் குழந்தைகளை திருப்பூரில் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து திருப்பூர் சென்ற பாப்பாரப்பட்டி காவல் துறையினர் அதியமான் மற்றும் அகிலா மற்றும் கழந்தைகளை அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அதியமான் அரசு மருத்துவமனைக்கு வரும் பெண்களிடம் மருத்துவ உதவி செய்வதாக ஆசை வார்த்தை கூறி செல்போன் நம்பரை கொடுத்து அடிக்கடி பேசுவதும் மருத்துவமனைக்கு விபத்தில் காயமடைந்து ஆபத்தான சூழலில் வரும் பொதுமக்களிடம் இந்த மருத்துவமனையில் இருந்தால் உயிர்பிழைக்க முடியாது.

சேலம் தனியார் மருத்துவமனைக்கு செல்லுங்கள் என கூறி, தனியார் மருத்துவமனையில் கமிஷன் வாங்கியதும் தெரியவந்தது. போலியாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உதவியாளர் பணிக்கு, பணி நியமன ஆணை தயாரித்துக் கொடுத்ததும் தெரியவந்தது. அதேபோல் பல பேரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக லட்சக்கணக்கில் பணம் வாங்கி ஏமாற்றியதும் தெரியவந்தது.

இந்நிலையில், அதியமானை பாப்பாரப்பட்டி காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் அதியமான் ஏற்கனவே இரண்டு திருமணம் செய்திருந்த நிலையில், ஒரு மனைவியை தனியாக வீடு எடுத்து வைத்திருந்ததும் தெரியவந்தது. பல பேரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்து போலியாக பணி நியமன ஆணை தயாரித்து கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Published by
அகில் R

Recent Posts

மும்பை படகு விபத்து : 13 பேர் பலி, 101 பேர் மீட்பு! மகாராஷ்டிரா முதலமைச்சர் தகவல்!

மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…

5 hours ago

லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…

சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…

8 hours ago

“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!

டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…

9 hours ago

புஷ்பா 2 வெளியீடு: நெரிசலில் சிக்கிய சிறுவன் மூளைச் சாவு… தாயை தொடர்ந்து மகனும் உயிரிழந்த சோகம்!

ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…

9 hours ago

“அம்பேத்கர்… அம்பேத்கர்…” அமித்ஷாவை வன்மையாக கண்டிக்கிறேன் – கொந்தளித்த விஜய்!

சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…

10 hours ago

இன்றும், நாளையும் 4 மாவட்டங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் – டெல்டா வெதர்மேன்.!

சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…

10 hours ago