கன்னியாகுமரியில் கார்- அரசு பெருத்து நேருக்கு நேர் மோதி கோர விபத்து.! 4 பேர் பலி.!
கன்னியாகுமரி மாவட்டத்தில் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட கோர விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் – நெல்லை நெடுஞ்சாலையில் வெள்ளாடம் பகுதியில், கார் மற்றும் அரசு பேருந்து நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் பெரும் விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் காரில் பயணித்த 12 பேரில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மீதம் உள்ளவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.