மேலும் 4 பேருக்கு கொரோனா வந்தால் கோயம்பேடு சந்தையை மூட வேண்டி வரும் என காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் எச்சரிக்கை விடுத்தார்.
கோயம்பேடு சந்தையில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தகவல் தெரிவித்தார்.
இந்நிலையில், மேலும் 4 பேருக்கு கொரோனா வந்தால் சந்தையை மூட வேண்டி வரும் என எச்சரிக்கை விடுத்தார். ஊரடங்கு காலத்தில் ஒருநாள் கூட கோயம்பேடு சந்தையில் தனிமனித இடைவெளி கடைபிடிக்கவில்லை, மொத்த வியாபாரம் என்று சில்லறை வியாபாரம் செய்வதாக காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் குற்றச்சாட்டினார்.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டை இடமாற்றம் செய்வது குறித்து நாளை காலை 10 மணிக்கு மீண்டும் ஆலோசனை நடைபெற உள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டை கேளம்பாக்கத்தில் பகுதிக்கு இடமாற்றம் செய்ய வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
வியாபாரிகள் ஆம்னி பேருந்து நிலையத்தில், தற்காலிகமாக செயல்பட அனுமதிக்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர். பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் வியாபாரிகளுடன் நாளை மீண்டும் ஆலோசனை நடைபெறுகிறது.
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இம்மாதம் 25-ஆம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற விவாகாரங்கள் துறை அமைச்சர் கிரண்…
அமெரிக்கா : உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு இந்திய நேரப்படி சரியாக மாலை…
மும்பை : டெல்லி அணி நிர்வாகம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக விளையாடி வந்த ரிஷப் பண்டை…
இஞ்சி தேன் சாப்பிடுவதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா ? சென்னை -இஞ்சி தேன் சாப்பிடுவதால் நம் உடலுக்கு ஏற்படும் ஆரோக்கிய…
டெல்லி : வரும் 2036-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த சர்வதேச ஒலிம்பிக்…
சென்னை : இந்திய ராணுவத்தின் ராஜ்புத் ரெஜிமென்ட்டில் அதிகாரியாக இருந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை கதையை மையமாக வைத்து…