எடப்பாடி பழனிசாமி உருவப்படம் எரிப்பு.! பாஜக நிர்வாகிகள் 4 பேர் கைது.!

Published by
மணிகண்டன்

நேற்று கோவில்பட்டியில் எடப்பாடி பழனிசாமி புகைப்படத்தை எரித்த சம்பவம் தொடர்பாக பாஜக நிர்வாகிகள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

தமிழக பாஜகவில் இருந்து தொடர்ந்து அடுத்ததடுத்த நிர்வாகிகள் வெளியேறி வருகின்றனர். அவர்களில் சிலர் அதிமுகவில் இணைந்து செயல்பட ஆரம்பித்துள்ளனர். இதற்கு பாஜகவில் சிலர் தங்கள் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

இபிஎஸ் புகைப்படம் எதிர்ப்பு : 

பாஜக நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்தது குறித்து எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கோவில்பட்டியில் பாஜக நிர்வாகிகள் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சுவரொட்டிகளை ஒட்டினர். அதில் எங்கள் முதல்வர் அண்ணாமலை என்றும், கூட்டணி தர்மத்திற்கு எடப்பாடி பழனிசாமி துரோகம் செய்துவிட்டதாகவும் குறிப்பிட்டு இருந்தனர்.

அதிமுக போராட்டம் : 

மேலும், எடப்பாடி பழனிசாமி புகைப்படங்களை எரித்தும் தங்கள் எதிர்ப்பை வெளிக்காட்டினர். இந்த சம்பவங்கள் அதிமுகவினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிமுகவினர் தூத்துக்குடி டிஎஸ்பி அலுவலகத்துக்கு சென்று இந்த சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இபிஎஸ் புகைப்படத்தை எரித்தவர்களை கைது செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.

பாஜகவினர் கைது :

இதனை அடுத்து, எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக புகைப்படங்கள் எதிர்த்த தூத்துக்குடி மாவட்ட பாஜக நிர்வாகி தினேஷ் உள்ளிட்ட 4 பேரை கோவில்பட்டி காவல்துறையினர் கைது செய்தனர்.

Published by
மணிகண்டன்

Recent Posts

பெரியாரை விமர்சிப்போரை அடையாளம் காட்ட விரும்பவில்லை…  மு.க.ஸ்டாலின் ‘சைலன்ட்’ விமர்சனம்!

சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் தனது மனைவி துர்கா ஸ்டாலின் உடன் பொங்கல்…

4 hours ago

மகா கும்பமேளா 2025-12 வருடங்களுக்கு ஒருமுறை வர காரணம் என்ன தெரியுமா ?

இந்தியாவில் நடைபெறும்  மகா கும்பமேளாவின் முக்கியத்துவம் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :12…

4 hours ago

‘பெண்கள் படிக்கவே கூடாது!’ அடம்பிடிக்கும் ஆப்கான்! அழைப்பு விடுத்த பாகிஸ்தான்!

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 2 நாட்கள் நடைபெறும் பெண்கல்வி குறித்த மாநாடு தொடங்கியுள்ளது. இஸ்லாமிய நாடுகளில் உள்ள…

4 hours ago

தினமும் எண்ணெய் தேய்க்கலாமா? கூடாதா? மருத்துவர்கள் கூறுவதென்ன?

தினமும் தலைக்கு எண்ணெய் தேய்த்தால் முடி வளருமா என்றும், எண்ணெய் வைக்கவில்லை என்றால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றியும் இந்தச்செய்தி குறிப்பில்…

4 hours ago

பொங்கல் டேஸ்டா வர இந்த டிப்ஸ் எல்லாம் பாலோ பண்ணுங்க..!

சென்னை :பாரம்பரிய மிக்க சுவையில் பொங்கல் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி=…

5 hours ago

அஜித்குமார் ஏன் ரேஸில் பங்கேற்கவில்லை? அடுத்தகட்ட முடிவுகள் என்ன? முழு அறிக்கை இதோ…

துபாய் : நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டுள்ளவர். தற்போது துபாயில்…

5 hours ago