பாஜக-அதிமுக கூட்டணிக்கு அச்சாரமாக, மிரட்டலுக்கு பயந்து கோட்டை அமீர் பதக்கம் புறக்கணிக்கப்பட்டுள்ளது – துரைமுருகன்
பாஜக-அதிமுக கூட்டணிக்கு அச்சாரமாக, மிரட்டலுக்கு பயந்து கோட்டை அமீர் பதக்கம் புறக்கணிக்கப்பட்டுள்ளது என்று திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திமுக பொருளாளர் துரைமுருகன் கூறுகையில், இந்தாண்டு குடியரசு தின விழாவில் கோட்டை அமீர் பதக்கத்தை அரசு வழங்காதது வேதனை அளிக்கிறது .கருணாநிதி அறிவித்த கோட்டை அமீர் பதக்கத்தை அரசு வழங்காததற்கு கண்டனம் தெரிவிக்கின்றேன். பாஜக-அதிமுக கூட்டணிக்கு அச்சாரமாக, மிரட்டலுக்கு பயந்து கோட்டை அமீர் பதக்கம் புறக்கணிக்கப்பட்டுள்ளது என்று திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.