சென்னையில் டிசம்பர் 9,10ம் தேதிகளில் ஃபார்முலா 4 பந்தயம்..! வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
சென்னையில் டிசம்பர் 9 மற்றும் 10ம் தேதிகளில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு விளையாட்டுத்துறை சார்பில் சென்னை ஃபார்முலா ரேசிங் சர்க்யூட் தொடக்க விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். தெற்காசியாவில் முதல்முறையாக ஸ்ட்ரீட் சர்கியூட் (Street circuit) பார்முலா 4 பந்தயம் சென்னையில் நடைபெறுகிறது.
இதற்காக, அரசு சார்பில் 42 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் அடுத்த வருடம் ஜனவரியில் தமிழ்நாட்டில் நடைபெறவுள்ளது.