கோவை இல்லையாம்!! சென்னையில் மீண்டும் ஃபார்முலா 4 கார் பந்தயம்!
ஃபார்முலா 4 கார் பந்தயத்தின் மூன்றாம் சுற்றுப் போட்டிகள் வரும் 14, 15 ஆகிய தேதிகளில் சென்னை இருங்காட்டுக்கோட்டையில் உள்ள கார் பந்தய டிராக்கில் நடைபெற உள்ளது.
சென்னை : தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும், ஆந்திராவைச் சேர்ந்த தனியார் அமைப்பும் இணைந்து சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயத்தை நடத்துகின்றன. இந்த கார் பந்தயம் கடந்தாண்டு அறிவிக்கப்பட்டு இருந்தது. அப்போது டிசம்பர் மாத கனமழை காரணமாக போட்டிகள் நடைபெறாமல் தள்ளிவைக்கப்பட்டது.
பின்னர், ஒருவழியாக, இதன் இரண்டாம் போட்டிகள் (ஆகஸ்ட் 31) மற்றும் நேற்று (செப்டம்பர் 1) ஆகிய தேதிகளில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது. இந்த நிகழ்வு உலகளவில் கவனம் ஈர்த்தது.
சென்னை தீவுத்திடலை சுற்றி 3.5 கிமீ சுற்றளவில் 19 திருப்பங்களைக் கொண்டு ஃபார்முலா 4 சர்கியூட் ரேஸிங் ஓடுதளம் மற்றும் அதனை பாதுகாப்பாக மக்கள் காணும்படியாக ஏற்பாடுகளும் சுமார் 200 கோடி ரூபாய் செலவீட்டில் இரவு நேர போட்டியாக நடந்து முடிந்தது.
இதனை தொடர்ந்து, 3ம் சுற்றுப் போட்டிகள் செப்டம்பர் 14, 15 தேதிகளில் சென்னை இருங்காட்டுக்கோட்டையில் உள்ள மெட்ராஸ் சர்வதேச கார் பந்தய ஓடுதளத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
3ம் சுற்றுப் போட்டி கோவையில் உள்ள கரி மோட்டார்ஸ் ஓடுதளத்தில் நடைபெறவிருந்த நிலையில், மீண்டும் சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளது. முதல் சுற்றுப் போட்டிகள் இதே ஓடுதளத்தில் நடந்து முடிந்தது குறிப்பிடத்தக்கது.