ஊர்க்காவல் படையினர் சங்கம் அமைப்பது தண்டனைக்குரிய குற்றம் – தமிழக அரசு

ஊர்க்காவல் படையினர் சங்கம் அமைப்பது தண்டனைக்குரிய குற்றம் என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் தெரிவித்துள்ளது.
ஊர்க்காவல் படையை சேர்ந்த நாகேந்திரன் என்பவர் சங்கம் தொடங்கியது அடுத்து, அவருக்கு எதிராக துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்துறைச் செயலர் சார்பாக சென்னை மாநகர காவல்துறை ஆணையர் பெரோஸ் கான் பதில் மனு தாக்கல் செய்தார்.
அப்போது, ஊர்காவல் படையினர் சங்கம் அமைப்பது தண்டனைக்குரிய குற்றம் என்று தமிழக அரசு தரப்பில் தெரிவித்துள்ளனர். ஊர்க்காவல் படை தான்னார்வ அமைப்பு என்பதால் சங்கம் அமைக்க அதிகாரம் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் கூறியுள்ளனர். இதனை அடுத்து காவல்துறை பதிலுக்கு நாகேந்திரன் விளக்கம் அளிப்பதற்காக வழக்கு செப்டம்பர் 7-ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : மும்மொழி விவகாரம் முதல்…மகா சிவராத்திரி கொண்டாட்டங்கள் வரை!
February 27, 2025
சின்ன டீம் கூடதான் விக்கெட் எடுப்பார் பெரிய டீம் கூட முடியாது! ரஷித் கானை விமர்சித்த இந்திய முன்னாள் வீரர்!
February 27, 2025
சினிமாவில் நடிச்சி சொத்து சேத்து வச்சிட்டு அரசியல் வராங்க! சிக தலைவர் திருமாவளவன் பேச்சு!
February 27, 2025
காலத்தால் அழியாத காதல் …15 ஆண்டுகளை கடந்த VTV…நடிகர் சிம்பு நெகிழ்ச்சி!
February 27, 2025