சென்னையைச் சேர்ந்த 27 பேர் மற்றும் ஈரோட்டை சேர்ந்த 12 பேர், தேனி மாவட்டம், போடி அருகே உள்ள குரங்கணி மலைப்பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கினார்கள். இவர்களில் 10 பேர் தீயில் சிக்கி பரிதாபகரமாக உயிரிழந்தனர்.
இதுதொடர்பாக வனக்காப்பளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், இந்த விபத்து குறித்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், இதுதொடரப்பாக விபத்தில் சிக்கியவர்களை மலையேற்றப் பயிற்சிக்கு அழைத்து சென்ற சென்னையை சேர்ந்த டிரக்கிங் கிளப் நிர்வாகி செய்தியார்களை சந்தித்து பேசினார். அப்போது, முறையான அனுமதி பெற்றுதான் நாங்கள் வனப்பகுதிக்கு சென்றோம். நாங்கள் போகும் போது வனப்பகுதியில் தீபற்றுவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. திரும்பி வரும் வழியில்தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
11 தேதி மலையில் இருந்து கீழிறங்கும் போதுதான் விவசாயிகள் மலை பகுதியில் தீ வைத்துள்ளனர். அதன் காரணமாகவே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். எளியோர்களுக்கு எதிராக கரங்கள் எளிதாக உயர்வதனைப்போல, தீ விபத்துக்கு காரணமென்று விவசாயிகள் மீது பழி சுமத்துவதா? என கேள்வியெழுப்புகின்றனர் பொதுமக்கள்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…