விவசாயிகளா குரங்கணி தீ விபத்துக்கு காரணம் ?பலிபோடும் ட்ரக்கிங் அமைப்புகள் ……..

Default Image

சென்னையைச் சேர்ந்த 27 பேர் மற்றும் ஈரோட்டை சேர்ந்த 12 பேர், தேனி மாவட்டம், போடி அருகே உள்ள குரங்கணி மலைப்பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட காட்டுத்தீயில்  சிக்கினார்கள். இவர்களில் 10 பேர் தீயில் சிக்கி பரிதாபகரமாக உயிரிழந்தனர்.

இதுதொடர்பாக வனக்காப்பளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், இந்த விபத்து குறித்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், இதுதொடரப்பாக விபத்தில் சிக்கியவர்களை மலையேற்றப் பயிற்சிக்கு அழைத்து சென்ற சென்னையை சேர்ந்த டிரக்கிங் கிளப் நிர்வாகி செய்தியார்களை சந்தித்து பேசினார். அப்போது, முறையான அனுமதி பெற்றுதான் நாங்கள் வனப்பகுதிக்கு சென்றோம். நாங்கள் போகும் போது வனப்பகுதியில் தீபற்றுவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. திரும்பி வரும் வழியில்தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

11 தேதி மலையில் இருந்து கீழிறங்கும் போதுதான் விவசாயிகள் மலை பகுதியில் தீ வைத்துள்ளனர். அதன் காரணமாகவே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். எளியோர்களுக்கு எதிராக கரங்கள் எளிதாக உயர்வதனைப்போல, தீ விபத்துக்கு காரணமென்று விவசாயிகள் மீது பழி சுமத்துவதா? என கேள்வியெழுப்புகின்றனர் பொதுமக்கள்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்