முன்பு ரஜினிகாந்த், இன்று இளையராஜா – ஜோதிமணி எம்.பி ட்வீட்

Default Image

அம்பேத்கருக்கு இணையாக மோடியை உயர்த்தி அவர் பேசுவதை வெறும் அரசியல் புரிதலற்ற நிலைப்பாடு என்று கடந்து போய்விட முடியாது என ஜோதிமணி எம்.பி ட்வீட். 

இசையமைப்பாளர் இளையராஜா புத்தகம் ஒன்றுக்கு எழுதிய முன்னுரையில், பிரதமர் மோடி தலைமையில் நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. சமூக நீதி தொடர்பாக பிரதமர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மோடியின் முத்தலாக் தடை போன்ற பல்வேறு சமூகப் பாதுகாப்பு திட்டங்களைக் கண்டு அம்பேத்கர் பெருமிதம் கொள்வார் என்றும் அம்பேத்கரும், மோடியும் இந்தியா குறித்து பெரிய கனவு கண்டவர்கள் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இதற்க்கு எதிர்ப்புகளும், ஆதரவுகளும் பெருகி வந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி அவர்கள் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இளையராஜாவின் இசை தமிழ் மண்ணின் ஆத்மார்த்தமான அடையாளங்களில் ஒன்று.அதற்காக அவரை நாம் என்றென்றும் நேசிப்போம். ஆனால் அம்பேத்கருக்கு இணையாக மோடியை உயர்த்தி அவர் பேசுவதை வெறும் அரசியல் புரிதலற்ற நிலைப்பாடு என்று கடந்து போய்விட முடியாது.

ஆர் எஸ் எஸ் / பாஜக பாசிச ,பிரிவினைவாத, வன்முறை சித்தாந்தம் ஊடுருவும் பல வழிகளில் இதுவும் ஒன்று. சமூகத்தில் மகத்தான தாக்கத்தை ஏற்படுத்தியவர்களை தனக்கு ஆதரவாகப் பேசவைப்பது. அதற்கென்று ஒரு விலையையும் அது வைத்திருக்கும். முன்பு ரஜினிகாந்த்,இன்று இளையராஜா.

ஆனால் தமிழ் மண் எச்சரிக்கையும் ,விழிப்புணர்வும் மிகுந்தது. அன்பை,அமைதியை,ஒற்துமையை,வளர்ச்சியை விரும்புவது. இதற்கு எதிரான ஆர் எஸ் எஸ்/ பாஜக பாசிச சித்தாந்தை யார் கையில் எடுத்தாலும் அவர்களை , இரக்கமற்று தோலுரித்து தொங்கவிடும் வழக்கமுடையது. இளையராஜாவுக்கும் அதுதான் நேர்ந்துள்ளது.

ஒரு கருத்தைக் கூறுவது ஒருவரின் உரிமை. அந்தக் கருத்து சமூகத்திற்கு எதிராக இருக்குமென்றால் அதற்கான கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டுதான் ஆகவேண்டும்.கருத்துரிமையும்,விமர்சிக்கும் உரிமையும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள். இன்று இளையராஜாவிற்காக கருத்துரிமைக் காவலர் வேடம் பூண்டுள்ள பாஜக, ஏன் மக்கள் விரோத மோடி அரசிற்கு எதிரான விமர்சனங்களை முன்வைப்பவர்களின் கருத்துரிமைக்கு எதிராக அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுகிறது?’ என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்