மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகிய மகேந்திரன் இன்று மாலை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைகிறார்.
சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாமல் படுதோல்வியடைந்ததை தொடர்ந்து அக்கட்சியின் துணைத்தலைவர் மகேந்திரன் விலகுவதாக செய்தியாளர்களை சந்தித்து அறிவித்திருந்தார்.
இதனால் அக்கட்சியின் மீது பல விமர்சனங்கள் எழுந்த நிலையில், அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். கட்சியின் மீதும், கமல்ஹாசன் மீதும் மகேந்திரன் சில குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.
இந்த நிலையில், மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகிய மகேந்திரன் இன்று மாலை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணையவுள்ளதாக அறிவித்துள்ளார். திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணையவுள்ளார். அண்ணா அறிவாலயத்தில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைவதற்கான பட்டியலையும் வழங்கவுள்ளார்.
ஹைதராபாத் : ஹைதராபாத்தின் சார்மினார் அருகே உள்ள குல்சார் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. திடீரென தீ விபத்து ஏற்பட்டதால்,…
டெல்லி : விராட் கோலி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, சுரேஷ் ரெய்னா விராட் கோலி குறித்து…
ஆந்திரா : PSLV C-61 ராக்கெட் மூலமாக அதிநவீன புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை புவி வட்டப் பாதையில் நிலைநிறுத்தும் முயற்சி…
ஆந்திரா : இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவும் நிலையில், எல்லைப் பகுதிகளை கண்காணிக்க உதவும் EOS-9 (RiSat-…
தூத்துக்குடி: தஞ்சாவூரில் இருந்து திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக பயணித்து சாத்தான்குளம் வட்டம், மீரான்குளம் பகுதியில் சாலையோரமாக இருந்த 50 அடி…
பெங்களூர் : இந்தியா, பாகிஸ்தான் தாக்குதலால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி…