எம்.ஜி.ஆர் பல்கலைகழகத்தின் முன்னாள் துணைவேந்தருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை.
சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தில், 2006 முதல் 2009 வரை துணைவேந்தராக பணியாற்றியவர் முர் முஸ்தபா உசைன். இவர் பணியில் இருந்த போது, 2008ம் ஆண்டு மே மதம், பிரிட்டிஷில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு விமானத்தில் சென்றுள்ளார்.
இதற்காக உயர்வகுப்பு இருக்கை முன்பதிவு செய்யப்பட்டு, விமான கட்டணமாக 2 லட்சத்து 99 ஆயிரத்து 673 ரூபாய் செலுத்தப்பட்டது. பின் இந்த டிக்கெட் ரத்து செய்யப்பட்டு, சாதாரண இருக்கையாக முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. உயர் வகுப்பு டிக்கெட்டில் பயணம் செய்ததாக கூறி, 2,22,332 ரூபாய் பணத்தை பல்கலைக்கழகத்தில் இருந்து கூடுதலாக பெற்றுள்ளார்.
மேலும், பிரிட்டிஷ், நார்வே, ஜெர்மனி, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில், நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக ,டிக்கெட் கட்டணமாக ரூ.7,82,124 பணத்தை பெற்றுள்ளார். இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த வழக்கை விசாரித்த ஊழல் தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓம்பிரகாஷ், முஸ்தபா மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதற்காக கூறி, அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியுள்ளார்.
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. இதில்…
கொல்கத்தா : ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் இன்று…
டெல்லி : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று அமெரிக்காவில் இறக்குமதியாகும் அயல்நாட்டு பொருட்கள் மீது அதிகப்படியான புதிய பரஸ்பர…
மதுரை : இன்று மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநாடு நடைபெற்று வருகிறது. வரும் ஏப்ரல் 6ஆம் தேதி…
சென்னை : டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை…