முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டுக்களை தெரிவித்த முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம்….!
தமிழ்நாட்டின் நியாயமான கோரிக்கைகளை மரியாதையாக ஆனால் உறுதியாக முன் வைத்த முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், 2 நாள் அரசுமுறை பயணமாக, சென்னையில் இருந்து நேற்று காலை தனி விமானம் மூலம் டெல்லிக்கு சென்றார். இதனையடுத்து,நேற்று மாலை பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்த அவர், தமிழகத்தின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமர் மோடியிடம் வழங்கி உள்ளார்.
இந்நிலையில், இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியாகாந்தியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி அவர்களும் உடன் இருந்தார்.
இந்நிலையில், இதுகுறித்து முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘பாரதப் பிரதமர் திரு மோடி அவர்களிடம் தமிழ்நாட்டின் நியாயமான கோரிக்கைகளை மரியாதையாக ஆனால் உறுதியாக முன் வைத்த முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.திருமதி சோனியா காந்தி மற்றும் அரசியல் தலைவர்களுடன் திரு ஸ்டாலின் அவர்களின் சந்திப்புகளுக்கு என் வாழ்த்துக்கள்.’ என பதிவிட்டுள்ளார்.
திருமதி சோனியா காந்தி மற்றும் அரசியல் தலைவர்களுடன் திரு ஸ்டாலின் அவர்களின் சந்திப்புகளுக்கு என் வாழ்த்துக்கள்!
— P. Chidambaram (@PChidambaram_IN) June 18, 2021