முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் வருமானத்துக்கு அதிகமாக 55% சொத்து சேர்த்ததாக முதற்கட்ட தகவல் அறிக்கையில் தெரிய வந்துள்ளது.
முன்னாள் போக்குவரத்துத்துறை எம்.ஆர் விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் சொத்து குவித்ததாக எழுந்த புகாரை அடுத்து, விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட அவருக்கு சொந்தமான 26 இடங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிரமாக சோதனையிட்டனர். இது அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சோதனை:
இந்த சோதனையில் 25 லட்சம் ரொக்கம், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன என்று லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்திருந்தனர். பின்னர் விஜயபாஸ்கர், அவரது மனைவியின் வங்கி லாக்கர்களை சோதனை செய்ய லஞ்ச ஒழிப்பு துறை முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டது. இதனையடுத்து, சொத்து ஆவணங்கள், முதலீட்டு ஆவணங்கள், பண பரிவா்த்தனை ஆவணங்கள் ஆகியவைற்றை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓபிஎஸ் & ஈபிஎஸ் கண்டனம்:
இதனிடையே, அரசியல் காழ்ப்புணா்ச்சியின் காரணமாக முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் மீது பொய்யான வழக்குகளை புனைய திமுக அரசு காவல்துறையை ஏவிவிட்டு சோதனையிட்டு வருவதற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கண்டம் தெரிவித்தனர். மேலும் விஜயபாஸ்கருக்கு அதிமுக உறுதுணையாக இருக்கும் என்றும் தெரிவித்திருந்தனர்.
ஆளுநரிடம் கொடுத்த ஊழல் பட்டியல்:
இதனையடுத்து,சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வீட்டில் எந்த ஒரு அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காகவும் சோதனை செய்யவில்லை என்றும் ஏற்கனவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுநரிடம் கொடுத்த ஊழல் பட்டியலின்படி நடவடிக்கை எடுக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.
வருமானத்திற்கும் அதிகமான சொத்து:
இந்நிலையில்,எம்.ஆர்.விஜய பாஸ்கர் வருமானத்திற்கு அதிகமாக 55 % சொத்து சேர்த்ததாக முதல் தகவல் அறிக்கை தெரிவித்துள்ளது.அதாவது,2016 ஆம் ஆண்டு தேர்தல் வேட்புமனுவில் ரூ.2.51 கோடி சொத்து மதிப்பு இருந்ததாக தெரிவித்த நிலையில் கடந்த தேர்தலில் சொத்து மதிப்பு ரூ.8.62 கோடியாக உயர்ந்துள்ளது தெரிய வந்துள்ளது.
இதனால்,அடுத்த கட்டமாக வங்கி கணக்குகள் மட்டும் அல்லாமல் வங்கி லாக்கரையும் சோதனை செய்ய லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்துள்ளதாகவும்,மேலும்,அவரது வங்கி கணக்குகள் முடக்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் தொடர்பாக கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று வீட்டுவசதித்துறை மானிய கோரிக்கைகள் நடைபெற்று…
மும்பை : கடந்த வாரம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்தார். அமெரிக்கவில் இறக்குமதி ஆகும்…
திருச்சி : இன்று காலை முதலே தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவுக்கு தொடர்புடையவர்கள் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி…
சென்னை : தமிழக பட்ஜெட் 2025-2026 முடிந்து அதன் பிறகு பட்ஜெட் மீதான விவாதம், துறை வாரியாக மானிய கோரிக்கைகள்…
டெல்லி : எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளை மீறி, வக்ஃப் வாரிய திருத்த மசோதா, 2025 மீதான முன்னோடியில்லாத 17 மணி…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…