தமிழக மாநில காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் காலமானார்!

Default Image

தமிழக மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் எம்.பியுமான ஞானதேசிகன் அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.

தமிழக மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் எம்.பியுமான ஞானதேசிகன் (71) கடந்த நவ.11ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக, சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலமானார். இவரது மறைவுக்கு அரசியல் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவர் தமிழகத்தில் இருந்து 2001-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை இரண்டு முறை மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்