Breaking: மணிப்பூர் மாநில ஆளுநர் இல.கணேசன் நாகாலாந்து ஆளுநராக மாற்றம்

Default Image

ஜார்க்கண்ட் ஆளுநராக தமிழ்நாடு பாஜகவின் முன்னாள் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் நியமனம்.

மகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியின் ராஜினாமாவை ஜனாதிபதி திரௌபதி முர்மு ஏற்றுக்கொண்டதாக ஜனாதிபதி செயலகம் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 12, 2023) தெரிவித்துள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தின் புதிய ஆளுநராக ஜார்க்கண்ட் ஆளுநர் ரமேஷ் பாய்ஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து ஜார்க்கண்ட் ஆளுநராக தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர்  சி.பி.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.கோவையில் இருந்து இரு முறை மக்களவைத் தொகுதி எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்  சி.பி.ராதாகிருஷ்ணன்.இவர் கடந்த 2019 நடைபெற்ற மக்களவை தேர்தலில் தோல்வி அடைந்தார்.

இந்நிலையில் 13 மாநிலங்களுக்கான ஆளுநர்கள் நியமனம் மற்றும் மாற்றம் செய்து ஜனாதிபதி திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.இதுபற்றி வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,

  • இதில் மணிப்பூர் ஆளுநர் லா கணேசன் நாகாலாந்து ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • ஆந்திர மாநில ஆளுநராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.அப்துல் நசீர் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • பீகார் கவர்னர் பாகு சவுகான், மேகாலயா கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இமாச்சல பிரதேச ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பீகார் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • ஆந்திரப் பிரதேச ஆளுநர் பிஸ்வா பூசன் ஹரிசந்தன் சத்தீஸ்கர் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • சத்தீஸ்கர் ஆளுநர் அனுசுயா உக்யே மணிப்பூர் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • ஆந்திரப் பிரதேச ஆளுநர் பிஸ்வா பூசன் ஹரிசந்தன் சத்தீஸ்கர் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • சத்தீஸ்கர் ஆளுநர் அனுசுயா உக்யே மணிப்பூர் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
  • அருணாச்சல பிரதேச ஆளுநராக லெப்டினன்ட் ஜெனரல் கைவல்யா திரிவிக்ரம் பர்நாயக் நியமனம்
  • சிக்கிம் ஆளுநராக லக்ஷ்மண் பிரசாத் ஆச்சார்யா
  • குலாப் சந்த் கட்டாரியா அசாம் ஆளுநராகவும், சிவ பிரதாப் சுக்லா இமாச்சல பிரதேச ஆளுநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்