உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன் காலமானார்.!

Default Image

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன் உடல்நலக்குறைவால் காலமானார்.

நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்தவர், சில நாட்களுக்கு முன் இவரின்  மனைவி மீனாட்சி ஆச்சி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். சமீபத்தில், திருச்சி தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், இன்று காலை ஏ.ஆர். லட்சுமணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன் சட்ட ஆணைய தலைவராகவும், முல்லைப்பெரியாறு ஆய்வுக் குழுவிலும் இருந்தவர்.  மேலும், பொது இடத்தில் புகை பிடிக்க தடை விதித்து தீர்ப்பளித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Nagpur Violence -Sunita Williams LIVE
Ilayaraja - Jagdeep dhankar
OGSambavam OUT NOW
Parilament session - Enforcement directorate
prithvi shaw
pm modi donald trump
sunita williams pm modi